#chithiraitv #இந்து ஆலயங்களில் நம்பிக்கையுடன் இறைவனை வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு பாஜக அண்ணாமலை |

1 просмотров 13.12.2021 00:02:51

Описание

இந்து ஆலயங்களில் நம்பிக்கையுடன் இறைவனை வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு. அதனை தடுத்து நிறுத்த யாருக்கும் தகுதி இல்லை என்று பா.ஜ.க. தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் இறைவனை வழிபட காஞ்சிபுரம் வந்திருந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் அளித்த பேட்டியின் பொழுது ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றதாக கூறப்படும் ஜாகீர் ஹுசைன் என்பவர் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ஆன்மீகத்தை நம்பி ஸ்வாமி கும்பிட அனைவருக்கும் உரிமை உண்டு.அதனை தடுத்து நிறுத்த யாருக்கும் தகுதி இல்லை. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் ஆன்மீகத்தை வளர்க்கவும் அனைவரது கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் கருத்தியல் மண்டபம் என்று உள்ளது. இந்நிலையில் ஜாகீர் ஹுசைன் என்பவர் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் இந்து சமய அறநிலையத்துறை அரங்கேற்றிய நாடகம் போல் தெரிகிறது என்றார். நடந்து முடிந்த சி.பி.எஸ்.இ.தேர்வில் பெண்கள் ஆண்களுக்கு அடி பணிந்து நடக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தி.மு.க , மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை இதனை சீரியஸாக எடுத்து கொள்ள வேண்டாம் என்றார்.

Комментарии

Теги:
chithiraitv, இந்து, ஆலயங்களில், நம்பிக்கையுடன், இறைவனை, வழிபட, அனைவருக்கும், உரிமை, உண்டு, பாஜக, அண்ணாமலை