#chithiraitv #முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பாஜக எம்.எல்.ஏ வும், பாஜக தேசிய மகளிரணி தலைவி பேச்சு |

6 просмотров 22.11.2021 00:02:18

Описание

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை மாவட்ட தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் மேடை பேச்சுரை தமிழகத்திலேயே இரண்டாவது மிக பெரிய நகரம். நாட்டில் பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களுக்கு பெயர் பெற்ற நகரம். மக்களுக்கு ஒர் பிரச்சனை என்றால் அரசாங்கம் வருவதற்கு முன்னால் பல்வேறு சமூதாய அமைப்புகள் ஓடோடி வந்து உதவக் கூடிய மக்களை கொண்டிருக்கிற கூடிய பெருமை பெற்றிருக்கிற இந்த மாநகருக்கு. மாவட்டத்திற்கு வருகை பபுரிந்து இருக்கக்கூடிய மாநிலத்தின் முதல்வர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் மாவட்டத்தின் சார்பாக வரவேற்புகள் சொல்லி, வணக்கங்களை சொல்லி ஜனநாயகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசங்கம் மக்கள் நல திட்டங்களை செயலாற்றும் பொழுது மக்களோடு நெருக்கமாக இருந்து அவர்களுடைய பிரச்சினைகளை புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக வேகமாக பணியாற்றினால் மாறுபட்ட கருத்துகள் மாறுபட்ட சிந்தனைகள் கொண்ட பல்வேறு கட்சிகள் எல்லாம் கூட ஒருமித்த முகத்தோடு பணியாற்றினால் மக்களோடு நலனை இன்னும் வேகமாக கொண்டு செல்லலாம். அந்த வகையில் அரசாங்கத்தோடு திட்டங்கள் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வதற்கு சட்டமன்ற உறுப்பினர் என்று முறையில் இந்த மக்களுடைய குரலாய் இந்த மக்களுடைய பிரச்சினைக்கு என்றும் அவர்களுடன் இருக்கின்ற ஒரு நபராக உங்களுடைய மனப்பூர்வமான நன்றிகளை மாண்புமிகு முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி இந்த நிகழ்வு நடக்கும் இடம் முதல் கொண்டு இன்னும் சுற்றுவட்டார பகுதிகள் வரை கடினமான மழை, இயற்கை சீற்றங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் சாதாரண காலங்களில் கூட அடிபடை வசதிகளை முன்னேற்றுவது இன்னும் வரக்கூடிய நாட்களில் அதிக தீவிரத்தோடு இந்த அரசு இயங்க வேண்டும் என்பதை கோரிக்கையை முன்வைத்து நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்தார்.

Комментарии

Теги:
chithiraitv, முதல்வர், ஸ்டாலின், முன்னிலையில், பாஜக, வும், தேசிய, மகளிரணி, தலைவி, பேச்சு