பேருந்து மீது பைக் மோதி விபத்து - வெளியான சிசிடிவி காட்சி!
Описание
<p>திண்டுக்கல்: கொடைக்கானல் - வத்தலகுண்டு பிரதான சாலையில் தனியார் பேருந்து மீது அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலை சாலையில், பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வாழை கிரி என்னும் இடத்தில் வளைவில் திரும்பிய போது, எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சலையில் உரசியபடி பேருந்தின் கீழ் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.</p><p>இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ராஜபாளையத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, இருவரையும் மீட்ட பயணிகள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. </p><p>இந்த நிலையில், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பாதிவாகியுள்ளது.</p>
Комментарии