#BOOMINEWS | சேலத்தில் ரக்சா பந்தன் பண்டிகையை வடமாநில மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர் |
75 просмотров
22.08.2021
00:01:42
Описание
சேலத்தில் ரக்சா பந்தன் பண்டிகையை வடமாநில மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்றைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சேலம் மாநகரில் வட மாநில பொதுமக்கள் அதிகம் வசிக்கும் ராஜாராம் நகர் பகுதியில் பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் கைகளில், அழகழகான டிசைன்களில் பல்வேறு வண்ணங்களிலான ராக்கியை கட்டி, நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ ஆரத்தி எடுத்து திலகமிட்டு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு, சகோதரர்கள் இனிப்புகள் மற்றும் பரிசுகளைக் கொடுத்து வாழத்தினர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக மிக எளிமையாக முறையில் அவரவர் இல்லங்களில் வழக்கமான உற்சாகத்துடன் ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது.
Комментарии