பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. வீடியோ

7 просмотров 22.12.2018 00:02:02

Описание

பணிபுரியும் நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு..... பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட வேண்டும், பணிபுரியும் நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், தமிழ்நாட்டில் ஆவணப் படுகொலையை தடுத்து நிறுத்திட கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும், போஸ்கோ சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும், பெண்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் விசாகா கமிட்டி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தோழி கூட்டமைப்பு சார்பில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஞானசவுந்தரி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். Des: The workplace must be protected

Комментарии

Теги: