விவசாயிகளின் தலையில் இடியை இறக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு- வீடியோ
1 просмотров
16.02.2018
00:01:52
Описание
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் நியாயம் வழங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தமிழக விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முற்றிலும் தமிழகத்தின் நியாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குமுறல் வெளியிட்டுள்ளனர். இருக்கும் அளவையும் சுப்ரீம் கோர்ட் குறைத்திருப்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. முழுக்க முழுக்க அநீதியாக செயல்பட்டு வரும் கர்நாடகத்தின் செயல்பாட்டையும், நிலைப்பாட்டையும் ஆதரிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதே என்று விவசாயிகள் அதிர்ச்சியுற்றுள்ளனர். Tamil Nadu Farmers hope that the Supreme Court will do justice to them on Cauvery Dispute today.
Комментарии