ADMK Cadres Celebrating Of Sasikala Judgement - Oneindia Tamil

3 просмотров 06.03.2017 00:03:04

Описание

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உறுதிசெய்து உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியதை அடுத்து, தமிழகம் முழுவதும் பொதுமக்கலும் அதிமுகவினரும் அதனைக் கொண்டாடி வருகின்றனர். திருப்பூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்பளித்த நிமிடத்தில் இருந்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். திருப்பூர் பார்க் சாலையிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு 100 லிட்டர் பன்னீர் ஊற்றி அதிமுக தொண்டர்கள் தங்கள் இந்த தீர்ப்பைக் கொண்டாடி வருகிறார்கள். எம்ஜிஆர் வளர்த்த கட்சியை, ஜெயலலிதா ஆலமரமாகச் செழிக்கச் செய்த கட்சியை சசியின் மன்னார்குடி மாபியா கும்பல் நாசமாக்க நினைத்தது. அதனைத் தடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. அதிமுக உடையாமல் இருக்க வேண்டும் என அங்கு குழுமியிருந்த தொண்டர்கள் கூறினர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில், அதிமுக தொண்டர்கள் இந்த தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து வருகின்றனர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வைக்கபப்ட்டிருந்த பிரமாண்ட பேனரில் சசிகலாவின் உருவப்படம் கிழித்தெறியப்பட்டது. இப்படி தமிழகத்தின் பல பகுதிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று மக்கள் பட்டாசு கொளுத்தி வருகின்றனர். People of Tamilnadu celebrating the verdict of supreme court against sasikala. Especially in Thiruppur and Salem Admk party persons. celebrating it in a big way. For More Updates Follow Us On Get Instant News Updates tamil.oneindia.com/ Get Latest Entertainment Updates tamil.filmibeat.com/ Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos youtube.com/user/OneindiaTamil Follow Us On G+ plus.google.com/+OneindiaTamil Like Us On Facebook facebook.com/oneindiatamil Follow Us On Twitter twitter.com/thatsTamil Download Our Oneindia Tamil Android App play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp Download Our Oneindia Tamil iTunes App itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711

Комментарии

Теги:
ADMK, Cadres, Celebrating, Sasikala, Judgement, Oneindia, Tamil